மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்போன் வாங்கி தராததால் மனவேதனை; 17 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை.! பெற்றோர் கண்ணீர்.!
அக்காவுடன் எழுந்த சண்டையால் மனவேதனையில் உச்சக்கட்டத்திற்கு சென்ற சிறுமி தற்கொலை செய்துகொண்டார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள எழுநாச்சிபுரம், காட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவரின் மகள் காவியா (வயது 17). காவியா பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில், இவர் தனக்கு செல்போன் வேண்டும் என பெற்றோரிடம் அடம் பிடித்ததாக தெரியவருகிறது. பெற்றோர் பணம் வந்ததும் வாங்கி தருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் காவியா தனது அக்கா தேவிகாவின் செல்போனை உபயோகம் செய்து இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தின் காரணமாக மனவேதனைக்கு சென்ற காவியா, வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த திருமானூர் காவல் துறையினர், காவியாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.