திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கார் - தனியார் பள்ளி வாகனம் மோதி பயங்கர விபத்து; நிகழ்விடத்திலேயே பரிதாப பலி.!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை, குழுமூர் பகுதியில் தனியார் பள்ளி பேருந்து - கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலியாகினர். முதற்கட்ட விசாரணையில், உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவந்தவர் பலியானது உறுதி செய்யப்பட்டது.
செந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி பேருந்து, நேற்று மாலை பள்ளி மாணவர்கள் 30 பேரை ஏற்றிக்கொண்டு செந்துறையில் இருந்து சன்னாசிநல்லூர் நோக்கி பயணம் செய்தது.
பேருந்து குழுமூரை கடந்து வரும்போது, அங்குள்ள ஆனைவாரி ஓடை பாலத்தில் உள்ள திருப்பத்தில் விபத்து நிகழ்ந்தது. இவ்விபத்தில் சென்னையை சேர்ந்த விஜய் என்பவர் உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த செந்துறை காவல் துறையினர், விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்தில் இருந்த மாணவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
விவசாயிகள் அப்பகுதியில் எள்ளு செடிகளை பயிரிட்டு, அதனை அறுவடை செய்து சாலையில் ஒருபக்கமாக காயவைத்திருந்த நிலையில், எதிர்திசை சாலையில் சென்ற பேருந்தின் மீது, வளைவு பகுதியில் எதிரே கார் வந்து மோதி விபத்து நடந்துள்ளது.