காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம், கருக்கலைப்பு.. நீதிபதி கண்முன் மாணவி தற்கொலை முயற்சியால் பரபரப்பு.!
திருவிழாவுக்கு காவல் பணிக்கு சென்ற திருமணமான ஊர்க்காவல் படைவீரர் கல்லூரி மாணவியை சீரழித்து, பணியை இழந்து அந்தரங்க வீடியோவை காண்பித்து மாணவியை சேர்ந்து வாழ மிரட்டும் கொடூரம் நடந்துள்ளது. மாணவி நீதிபதி கண்முன்னே தற்கொலைக்கு முயன்ற பகீர் சம்பவம் அரியலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை, குறிஞ்சிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 30). இவரின் மனைவி சரிதா. அர்ஜுன் செந்துறையில் ஊர்காவல்படை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த வருடம் சன்னாசிநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த அர்ஜுன், அதே ஊரை சேர்ந்த பள்ளி மாணவியிடம் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த மாணவி பள்ளிப்படிப்பை நிறைவு செய்து வேப்பூரில் செயல்பட்டு வரும் அரசு கல்லூரியில் படிக்க சேர்ந்துள்ளார். இந்த கல்லூரிக்கு அருகே அர்ஜுனின் உறவினர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரவே, பெட்டிக்கடைக்கு சென்று மாணவியுடன் மீண்டும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் நட்பு ரீதியான நெருக்கம் அதிகமானதாக தெரியவருகிறது.
இதனையடுத்து, மாணவியை சீரழிக்க திட்டமிட்ட அர்ஜுன், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக எடுத்து வெவ்வேறு தருணங்களில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஒரு சமயத்தில் மேல் தனது திருமணத்தை மறைத்து, அங்குள்ள கோவிலில் மாணவிக்கு தாலி கட்டி ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மாணவி கர்ப்பமாகிவிடவே, கர்ப்பத்தை கலைக்குமாறு அர்ஜுன் வற்புறுத்தி இருக்கிறார். அதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர் வீடு கழிவறையில் வழுக்கி விழுந்து கர்ப்பம் கலைந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் அர்ஜுனின் மனைவி சரிதாவுக்கு தெரியவரவே, அவர் அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அர்ஜுனின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, ஜாமினில் வெளியே வந்த அர்ஜுனை பணிநீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததால் மாணவியும் அர்ஜுனை பிரிந்து சென்ற நிலையில், அர்ஜுன் தனது செல்போனில் மாணவியுடன் இருந்த புகைப்படத்தை காண்பித்து தன்னுடன் வாழ வேண்டும் என மிரட்டி இருக்கிறார்.
இந்த விஷயம் தொடர்பாக புகாரளிக்க மாணவி அரியலூர் மாவட்ட நீதிபதி முன்பு வந்திருந்த நிலையில், நீதிபதி கண்முன்னே தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். நிகழ்விடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் மாணவியை மீட்டு நீதிபதியிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனும் பறிமுதல் செய்யப்பட்டன. நீதிபதியிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீருடன் விவரித்த மாணவி, அர்ஜுன், அவரின் முதல் மனைவி சரிதா, தந்தை பழனிவேல் மற்றும் தம்பி மணிமாறன் ஆகியோருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார்.
இதனைகேட்ட நீதிபதி மகாலட்சுமி மாணவியிடம், "நன்றாக படி, வேலைக்கு செல்வதற்கு முயற்சி எடுத்து வாழ்ந்து காட்டு, தற்கொலை எண்ணம் எப்போதும் கூடாது. இந்த வழக்கில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அப்பா - அம்மாவுடன் பத்திரமாக இரு. மகளை பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறி அனுப்பி வைத்தார். இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.