திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அக்கா, அம்மா சேலை, ஷால் சக்கரத்துல சிக்கிருக்கு.. அரியலூரில் நூதன திருட்டில் ஈடுபட்ட 2 கயவர்கள் கைது..!
நூதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் அரியலூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கில்லாடி போல யோசனை செய்து, பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை, உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, புராணம் கிராமம் வழியாக சென்று வருவோரிடம் இரசாயன பொடியை தூவி கொள்ளையடிக்கும் செயல் அதிகரித்து வந்தது. கொள்ளை கும்பல் அவ்வழியாக செல்லும் பெண்களிடம், "உங்களின் துப்பட்டா வண்டியில் சிக்கியுள்ளது, சேலை சக்கரத்தில் சிக்கியுள்ளது" என்று திசைதிருப்பி கொள்ளையடித்தும் வந்துள்ளனர்.
இந்த தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுத்துவது 2 பேர் கும்பல் என்பதை உறுதி செய்த அதிகாரிகள், அவர்களை கைது செய்ய தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால், கொள்ளை சம்பவம் நடந்த பின்னர் தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்துள்ளது. அவர்கள் ரசாயன பொடியை உபயோகம் செய்து திருட்டில் ஈடுபடுவதால், அவர்களின் அடையாளம் குறித்தும் பாதிக்கப்பட்ட மக்களால் சரியான தகவல் தெரிவிக்க இயலாமல் இருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் செந்துறையில் ஜவுளிக்கடை நடத்தி வரும் பழனியம்மாள் (வயது 50), தனது இருசக்கர வாகனத்தில் நல்லாம்பாளையம் கிராமத்தை நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தார். சமத்துவபுரம் அருகே செல்கையில் அவரை பின்தொடர்ந்த 2 வாலிபர்கள், சேலை சக்கரத்தில் சிக்கியுள்ளது என்று கூறியுள்ளனர். பழனியம்மாள் வாகனத்தை நிறுத்த முயற்சித்தபோது, கொள்ளையர்கள் ரசாயன பொடியை தூவி 7 சவரன் தாலி சங்கிலியை பறித்து சென்றுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் பழனியம்மாள் புகார் அளிக்கவே, கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான், ஜெயங்கொண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் கலை கதிரவன், சிறப்பு உதவி ஆய்வாளர் பழனிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கடந்த 1 வாரம் தொடர் விசாரணை நடத்திய நிலையில், பழனியம்மாள் புகார் அளித்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்தனர். எதற்ச்சையாக இரும்புலிக்குறிச்சியில் இருந்து பல்சர் வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை மடக்கி விசாரணை செய்ய, அவர்கள் முன்னுக்கு பின்னர் முரணான தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் பாணியில் விசாரணை செய்ததும் இருவரும் செந்துறை அருகேயுள்ள பூமுடையான்குடிகாடு கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 27), மற்றொரு ராஜேஷ் (வயது 24) என்பது உறுதியானது.
இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த 1 வாரமாக தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில், பொன்பரப்பி, ஆனந்தவாடி கிராமத்தில் பெண்களை குறிவைத்து சங்கிலி பறிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். கொலை சம்பவத்தில் பெண்களுக்கு கண்கள் தெரியாமல் இருக்க கான்பிளவர் மாவை தூவி சென்றதும் தெரியவந்துள்ளது. கடன் தொல்லை காரணமாக இருவரும் வழிப்பறி திருடன் ஆகியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து 17 சவரன் நகைகள், ரூ.60 ஆயிரம் பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருவரும் விசாரணைக்கு பின்னர் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.