திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பள்ளியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 19 குழந்தைகள் உடல்நலக்குறைவால் அவதி; அரியலூரில் அதிர்ச்சி.!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை, ஆனந்தவாடி, சோழ்ங்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
நேற்று இப்பள்ளியில் பயின்று வந்த மாணவ - மாணவிகளுக்கு மதியம் சத்துணவில் வெஜிடபிள் பிரியாணி மற்றும் முட்டை ஆகியவை சமைத்து வழங்கப்பட்டுள்ளது.
சமையல் அமைப்பாளர் ஷரியா பேகம் மற்றும் சமையலர் விமலா ஆகியோர் குழந்தைகளுக்கு உணவை பரிமாறி இருக்கின்றனர்.
இந்நிலையில், பள்ளிக்கு வந்த 19 குழந்தைகள் மதிய உணவை சாப்பிட்டு மாலை வீட்டிற்கு சென்றதும் வாந்தி மற்றும் மயக்கத்தால் அவதிப்பட்டு இருக்கின்றனர்.
இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தைகளை உடனடியாக மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
அங்கு குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் உடல்நலம் தேறி தற்போது வீடு திரும்பி வருகின்றனர். இது தொடர்பாக செந்துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.