மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ... திருமணமான மூன்றே மாதத்தில் ஆயுதப்படை காவலர் தற்கொலை... காவல்துறை விசாரணை.!
சென்னை பெருநகர ஆயுதப்படையில் உள்ள குதிரை படையில் காவலராக பணியாற்றி வந்த அருண்குமார் என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் 2022 ஆம் ஆண்டு முதல் ஆயுதப் படையில் குதிரைப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஏழு மாதங்களாக தன்னுடன் பணியாற்றும் புஷ்பராஜ் என்பவருடன் அயனாவரம் பகுதியில் அமைந்துள்ள புஷ்பா கார்டன் முதல் தெருவில் வசித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் அருண்குமார் பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரியா திருநெல்வேலியில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்த புஷ்பராஜ் வீட்டிலுள்ள அறையில் அருண்குமார் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் அருண்குமார் மன உளைச்சலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது. அருண்குமார் தனது பெற்றோரை கவனித்துக் கொள்ள கூடாது என்று அவரது மனைவி பிரியா செல்போனில் சண்டை போட்டதால் மன உளைச்சல் இருந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.