திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருமணமான சில நாட்களிலேயே பணிக்கு திரும்பிய ராணுவவீரர் ! விடுமுறைக்காக வந்தபோது நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வசித்து வந்தவர் ராணுவ வீரர் சுரேந்திரநாத். இவரது மனைவி ராதிகா. இவர்கள் இருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே சுரேந்திரநாத் இராணுவ பணிக்காக சென்றுவிட்டார்
அதனை தொடர்ந்து கடந்த மாதம் விடுமுறை கிடைத்த நிலையில் சுரேந்திரநாத் தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் அவருக்கும், அவரது மனைவி ராதிகாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கோபித்துக்கொண்டு மனைவி ராதிகா அவரை விட்டு பிரிந்து தனியாக வழ்ந்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சுரேந்தர்நாத் தனது வீட்டு மொட்டை மாடியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 3 மாதத்திலேயே ராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.