திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ராணுவ வீரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை.! அதிர்ச்சி காரணம்.!
சென்னை ஆவடி அருகே உள்ள ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை செய்து வருகிறார் சந்தோஷ் குமார். ராணுவ வீரரான இவருக்கு வினுபிரியா என்பவருடன் திருமணமாகி இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சந்தோஷ்குமார் நேற்று முன்தினம் அருகில் உள்ள பூங்காவிற்கு குழந்தைகளை விளையாடுவதற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக பிள்ளைகளை பூங்காவிற்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார் வினுபிரியா. ஆனாலும் மனைவியின் பேச்சை மீறி சந்தோஷ்குமார் இரண்டு பிள்ளைகளையும் அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும், குழந்தைகளை பூங்காவில் விட்டுவிட்டு மனைவிக்கு போன் செய்து குழந்தைகள் இருவரையும் பூங்காவில் விளையாடுவதற்காக விட்டு தான் வேலைக்கு சென்று விட்டதாகவும், அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறும் கூறியுள்ளார்.
இதையடுத்து வினுபிரியா பூங்காவிற்கு சென்று இரண்டு பிள்ளைகளையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். தனது பேச்சை கணவன் கேட்கவில்லை என்று மனவேதனையில் இருந்த வினுபிரியா திடீரென வீட்டில் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்து சந்தோஷ்குமார் பார்த்த போது, மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.