கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தும் தனிமைப்படுத்தி கொண்ட ராணுவ வீரர்! இளைஞனை பாராட்டும் கிராம மக்கள்!



army mans maintain self quarantine after corona negative

வெளி நாட்டில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வருபவர்கள் மூலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்து உள்ள தீத்தானிபட்டியை சேர்ந்த மங்கப்பன் என்பவரின் மகன் பாக்கியராஜ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் விடுமுறையில் சொந்த ஊரான தீத்தானிபட்டிக்கு வந்துள்ளார். இவர் ஊருக்கு வந்தவுடன் கொரோனா பரிசோதனை செய்து விட்டு தன்னை தனிமை படுத்திக்கொண்டுள்ளார். பரிசோதனை முடிவில் நெகட்டிவ் வந்த பிறகும் தன்னை மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

Army man

இதேபோல், அருணாச்சாலப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் ஹைகர் என்பவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் விடுமுறையில் அருணாச்சாலப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த கிராமமான அந்துருக்கு கடந்த ஜூலை 3ஆம் தேதி வந்துள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் வீட்டிற்கு செல்லாத அவர் தனது விவசாய நிலத்தில் வேன் ஒன்றின் மூலம் டெண்ட் தயார் செய்து தனிமையில் தங்கியுள்ளார். இந்த ராணுவ வீரர்களின் பொறுப்பான செயலுக்கு கிராம மக்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.