நூதன திருட்டு ஆசாமி கைது : அடமான கடைகளில் கைவரிசை...!
நாகர்கோவில் செட்டிகுளத்தில் வசித்து வரும் ஜேசுராஜா என்பவரும் அவரது இரண்டாவது மனைவியும், கடந்த ஆறாம் தேதி கருங்களுக்கு காரில் சென்று வட்டி கடை முன்பு காரை நிறுத்திவிட்டு, அனுஷ்கா மட்டும் காரிலிருந்து இறங்கி கடைக்கு சென்றுள்ளார். பின்பு 9 கிராம் எடையுள்ள 2 காப்புகளை அடமானம் வைத்து 60 ஆயிரம் பணம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் நகையை அடமானம் வங்கிய வட்டி கடை உரிமையாளருக்கு போலி நகையை ஆக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நகையை உரசி பார்த்ததில் அசல் போலவே இருந்தாலும் நகையின் வடிவம் அவருக்கு தொடர்ந்து சந்தேகத்தை உண்டாக்கியுள்ளது. இதனால் சில நாட்களுக்கு முன்பு வட்டி கடை உரிமையாளர் அந்த நகையை வெட்டி பார்த்துள்ளார். அப்போது மேல்பகுதியில் தங்கமும் உன் பகுதி முழுவதும் செம்பும் இருந்தது கண்டு ஏமாற்றத்தில் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே நகை அடமான கடை நடத்துபவர்களுக்கு வாட்ஸ்அப் குழுவில் நகையின் படத்தை போட்டு விவரத்தை அதில் கூறியுள்ளார். இதை பார்த்த தேங்காய்ப்பட்டினம் பகுதியில் உள்ளவர்கள், இதே போன்று தங்கள் கடைகளும் ஒரு பெண் வந்து நகையை அடமானம் வைத்துள்ளததை நினைவில் வைத்து, நகைகளை சோதித்துப் பார்த்தபோது அவர்களும் மாற்றப்பட்டது தெரியவந்தது. உடனே இது குறித்து கருங்கல் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலி நகை அடமானம் வைத்து ஏமாற்றிய தம்பதியை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் குமாரபுரம் அருகே உள்ள சித்திரங்கோட்டில் சுரேஷின் அடமான கடையில், பெண் ஒருவர் 10 கிராம் எடை கொண்ட காப்பு அடமானம் வைத்து பணம் பெற்றார். இதற்கிடையில் வாட்ஸ்அப் குரூப்பில் தகவலை பார்த்த சுரேஷ் நகையை பரிசோதித்து பார்த்தபோது போலி நகை என தெரியவந்தது. ஏமாற்றுக்கார தம்பதியினரின் கார் நம்பர் பற்றிய தகவல் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த தகவலை வைத்து கொற்றிகோடு காவல் ஆய்வாளர் ரசல் ராஜ் விசாரணை மேற்கொண்டார். மேலும் நேற்று மதியம் 2 மணிக்கு வேர்க்கிளம்பி பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்த போது அவர் நாகர்கோவிலை சேர்ந்த ஜேசுராஜா என்பதும், போலி நகையை வைத்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர் எங்கெல்லாம் நகை அடமானம் வைத்துள்ளார் என்றும், ஒரே மாதிரியான போலி தங்க காப்பினை யார் செய்து கொடுக்கிறார்கள். இந்த மோசடி கும்பல், கும்பலாக செயல்படுகிறார்களா? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஜேசுராஜின் மனைவி அனுஷாவை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.