மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆக்சிஜன் பற்றாக்குறை.! யாராவது உதவி செய்ய முடியுமா.? கிரிக்கெட் வீரர் அஸ்வின் வேண்டுகோள்.!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகிறது.
இந்தநிலையில் பிரசன்னா என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பல நோயாளிகள் (என் பெற்றோர் உட்பட) கடுமையான பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன, அவர்கள் வென்டிலேட்டர் ஆதரவுடன் வேறு இடத்திற்கு மாற்றப்படுகின்றன. தேவையான O2 விநியோகத்தை மீட்டமைக்க அல்லது ஏற்பாடு செய்ய உதவுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
Can anyone help? #emergency https://t.co/zrTyCjE945
— Mask up and take your vaccine🙏🙏🇮🇳 (@ashwinravi99) May 9, 2021
அவரது ட்விட்டர் பதிவை இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அஸ்வின் பகிர்ந்து, யாராவது உதவி செய்ய முடியுமா என பதிவு ஒன்றை போட்டுள்ளார். தற்போது அந்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.