மாடிப்படியில் கால் இடறி விழுந்த விஜய் தேவரகொண்டா; ஷாக்கில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
அத்திவரதர் தரிசனம் மேலும் நீட்டிக்கப்படுமா? 48 நாளுக்கு நீட்டிக்க நீதிமன்றத்தில் முறையீடு!!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கியது. மொத்தம் 48 நாட்கள் நடக்கும் இந்த வைபவத்தில் 24 நாட்களுக்கு சயன கோலத்திலும் மீதமுள்ள 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சியளிப்பார். அந்த வகையில் சயன கோலம் முடிந்து நின்ற கோலம் கடந்த 1-ஆம் தேதி துவங்கியது.
அத்திவரதர் தரிசனம் சயன கோலத்தில் தொடங்கியது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்ட வண்ணம் இருந்தனர். அத்திவாரத்தார் தரிசனத்திற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் படையெடுத்து வந்து அத்திவரதரை தரிசித்தனர். விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
அத்திவரதர் தரிசனம் வரும் 16-ந் தேதியுடன் நிறைவடைந்ததும் அடுத்த 40 ஆண்டுகளுக்கு அத்திவரதரை குளத்தில் வைப்பதற்கான பணிகள் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் முதியோர் உள்ளிட்ட லட்சக்கணக்கானவர்கள் இன்னும் அத்திவரதரை தரிசிக்காத காரணத்தால் தரிசன உற்சவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் நீதிபதி ஆதிகேசவலு முன் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதுகுறித்து இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறுகியில், ஆகம விதிப்படி முன்பு என்ன நடந்ததோ அதுவே இப்போதும் தொடரும். எனவே அத்திவரதர் தரிசனம் நீட்டிக்கப்படாது என்றார்.