திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தங்கையின் திருமணத்தில் அண்ணன் பலாத்கார முயற்சி: விலங்கு பூட்டி சிறையில் அடைத்த போலீசார்..!
தங்கையின் திருமணத்திற்கு வந்த தோழியை வாலிபர் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் தங்கையின் திருமணத்திற்கு வந்த தோழிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ய முயற்சித்த டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள சூசைப்புடையான்பட்டியில் வசித்து வருபவர் சிவா(28). இவர் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சிவாவின் தங்கையின் திருமணம் நேற்று முன்தினம் நடந்தது. தோழியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கரூரிலிருந்து 19 வயது பெண் திருமணத்திற்கு வந்திருந்தார்.
அந்தப் பெண் மிகவும் அழகாக இருந்ததால், சிவாவிற்கு அந்த பெண்ணின் மேல் ஒரு கண் இருந்தது. இதனால் அந்தப் பெண்ணிற்கு குளிர்பானத்தில் பீரை கலந்து கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் போதையில் மயங்கிய அந்த இளம்பெண்ணை ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அப்போது அந்த பெண் திடீரென சுயநினைவு வரவும் பதற்றத்துடன் சிவாவின் பிடியிலிருந்து தப்பித்து ஓடி வந்து விட்டார். இந்த சம்பவத்தை உறவினர்களிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக, சிவா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். தங்கையின் திருமணத்திற்கு வந்த தோழியை வாலிபர் பலாத்காரம் செய்ய முயற்சித்தது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.