மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழக மக்களே உஷார்.. வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா ..13 ஆக உயர்ந்த கொரோனா பாதிப்பு..!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ள நிலையில் வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழக பயணிகளால் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கும் அபாயம் உள்ளது.
அந்த வகையில் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தமிழகம் வந்த 2 பேருக்கும் மலேசியா, சீனாவில் இருந்து வந்த தல ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பின் விளைவாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி அனைத்து விமான பயணிகளும் பயணத்தின் போது மாஸ்க் அணிய வேண்டும் என்றும், மேலும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரேண்டம் பரிசோதனை தேவையில்லை என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.