மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹெல்மெட் போடாததால் 1000 ரூபாய் அபராதம்! அதிர்ந்து போன ஆட்டோ ஓட்டுநர்!!
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சாகுல் ஹமீத் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் சம்பவ தினத்தன்று அவரது மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
அதில் அவர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக வந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டினர் சாகுல் ஹமீது நாகைப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
நான் ஆட்டோ ஓட்டுபவர் ஆட்டோவில் செல்லும்போது ஹெல்மெட் அணியவில்லை என்பதற்கு அபராதம் விதித்திருப்பதாக எனக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது என்று குற்றம் சாட்டியவர், இது குறித்து உடனே உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.