மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி மாணவியிடம் தகாத பேச்சு.. ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது.!
சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்ப தண்டையார்பேட்டையில் இருந்து ஷேர் ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார்.
அப்போது ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஆபாச வார்த்தை மற்றும் துன்புறுத்தும் வகையில் ஈடுபட்டுள்ளார். இதனால் மணமுடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மனைவியின் பெற்றோர் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக பாஸ்கரனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.