மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரவில் கணவரிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய 28 வயது இளம்பெண்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் இரவில் கணவரிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி திண்டிவனம் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த பெருமுக்கல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுகன்ராஜ் திண்டிவனம் சவாரி செல்வதாக கூறி இளம்பெண்ணை அழைத்துள்ளார்.
ஆட்டோ டிரைவரின் பேச்சை நம்பி அந்த இளம் பெண்ணும் ஆட்டோவில் ஏறியுள்ளார். பாதி தூரம் சென்றதும் பெருமுக்கல் மலைப்பகுதியின் அருகே உள்ள முட்புதரில் ஆட்டோவை நிறுத்தி விட்டு அந்த பெண்ணை இறங்க சொல்லி இருக்கிறார் சுகன்ராஜ். என்ன நடக்க போகிறது என்று தெரிந்தும் அச்சத்துடனே கீழே இறங்கியுள்ளார் அந்த இளம்பெண்.
பின்னர் அந்த பெண்ணை முட்புதரில் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது தைரியமாக அந்த இளம்பெண் ஆட்டோ டிரைவரை அடித்து கீழே தள்ளி விட்டு அங்கிருந்து மெயின் ரோட்டிற்கு வந்து தனது கணவருக்கு போன் செய்து நடந்தவற்றை கூறி அழுதுள்ளார்.
உடனே விரைந்து வந்த அந்த பெண்ணின் கணவர் மனைவியை அழைத்து சென்று மருத்துவமனையில் சிகிச்சை அளித்து விட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர் சுகன்ராஜை கைது செய்து போக்கோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.