கல்லூரியில் மாணவிக்கு கட்டாய திருமணம்.. கேலி செய்த கல்லூரி தோழிகளால் மனமுடைந்த பெண் தற்கொலை.!



Avadi Forced Married College Girl Suicide due to Feeling Guilty Friends Mocking and Teasing

பெற்றோர்களின் கட்டாயத்தால் திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி, தோழிகளின் கேலி-கிண்டலால் மனஉளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் நடந்துள்ளது.

சென்னை வியாசர்பாடி எஸ்.எம் நகரை சார்ந்தவர் மோனிஷா (வயது 22). இவருக்கும், ஆவடியை அடுத்துள்ள சேக்காடு பகுதியை சார்ந்த உறவினர் அகிலன் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

மோனிஷா அண்ணாநகரில் உள்ள கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வந்த போதே, அவருக்கு திருமணம் நடந்துள்ளது. மேலும், படிப்பை முடித்துவிட்டு திருமணம் செய்துகொள்கிறேன் என்று மோனிஷா தெரிவித்தும் பலனில்லாது, அவரின் பெற்றோர்களால் கட்டாய திருமணம் நடந்துள்ளது. 

திருமணம் முடிந்ததில் இருந்து மனவேதனையில் இருந்து வந்த மோனிஷா, தனது கணவரின் வீட்டில் இருந்தவாறு கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். அப்போது, கல்லூரியில் பயின்று வரும் சக தோழிகள், மோனிஷாவின் திருமண வாழ்க்கை குறித்து கேலி, கிண்டல் செய்துள்ளனர். 

chennai

ஏற்கனவே பிடிக்காத திருமணத்தால் மனவேதனையில் இருந்து வந்த மோனிஷா, உச்சகட்ட மனவருத்தத்திற்கு சென்று வீட்டில் தனியாக இருக்கையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஆவடி காவல் துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளையில், பிடிக்காத திருமணம் செய்து கணவருடன் வாழ்ந்து வந்த மோனிஷாவை, கல்லூரியில் தோழிகள் கேலி, கிண்டல் செய்ததும் அம்பலமானது. மோனிஷாவின் தற்கொலை குறித்து தொடர் விசாரணை நடந்து வரும் நிலையில், திருமணம் முடிந்து 3 மாதமே ஆவதால் திருவள்ளூர் வட்டாட்சியர் விசாரணையும் நடந்து வருகிறது.