மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
+2 தேர்வில் தேர்ச்சியடையாததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை... சென்னையில் சோகம்...
சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த தேவா என்ற மாணவன் இன்று வெளியான +2 தேர்வில் தேர்ச்சி பெறாத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை ஆவடி கோவர்தனகிரி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் தேவா(16) அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் 12 வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. அதில் தேவா இரண்டு படங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளான் மாணவன் தேவா.
பின்னர் வீட்டில் யாரும் நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் தேவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.