மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரிட்ஜில் வைத்த நூடுல்ஸை சாப்பிட்டு 2 வயது குழந்தை திடீர் பலி.. பெற்றோர்களே கவனம்..!
முதல்நாள் சமைத்த நூடுல்ஸை பிரிட்ஜில் வைத்து மறுநாள் குழந்தைக்கு தாய் கொடுத்ததால், பரிதாபமாக குழந்தை பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.
திருச்சி காரைக்குடி ஊராட்சி மருதமுத்து நகரில் வசித்து வருபவர் சேகர். இவரது மனைவி மகாலட்சுமி. தம்பதிகளுக்கு சாய்தருண் என்ற 2 வயது மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக சாய் தருணுக்கு உணவு அலர்ஜியால் ஒருவிதமான புண் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தாய் மகாலட்சுமி மகனுக்கு ஆசை ஆசையாக நூடுல்ஸ் தயாரித்து ஊட்டியுள்ளார். ஆனால் சாய்தருண் அதில் பாதியை மட்டும் சாப்பிட்ட நிலையில், மீதியை எடுத்து தாய் பிரிட்ஜில் வைத்துள்ளார். மறுநாள் காலை தனது குழந்தைக்கு பிரிட்ஜில் வைத்த நூடுல்ஸை சூடு பண்ணி ஊட்டியுள்ளார்.
அதை சாப்பிட்ட பின் தருண் நாள் முழுவதும் எதுவும் சாப்பிட முடியாமல் சோர்வாக இருந்துள்ளார். மேலும் மாலை திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு பெற்றோர்கள் மருத்துவமனை சென்ற நிலையில், குழந்தை முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, உணவு அலர்ஜி இருந்த குழந்தைக்கு முதல் நாள் சமைத்த நூடுல்ஸை கொடுத்ததால் ஒவ்வாமை காரணமாக இறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.