மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தண்ணீர் வாலியில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி.. கதறும் பெற்றோர்.!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஜே ஜே நகரில் வசித்து வருபவர் முரளி. இவர் ஆட்டோ ஒட்டி வந்துள்ளார். இவருக்கு கங்கம்மாள் என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஜீவானந்தம் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இதில் முரளி வழக்கம் போல் ஆட்டோ ஓட்ட சென்றிருந்த நிலையில், கங்கம்மாள் உடல்நிலை சரியில்லாததால் மாத்திரை போட்டு தூங்கியுள்ளார்.
அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை ஜீவானந்தம் வீட்டின் அருகிலுள்ள குளியலறையில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்த ஆண்டாவில் தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்து மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.
இதனிடையே திடீரென தூக்கம் தெளிந்து தாய் கங்கம்மாள் அருகில் குழந்தை காணாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காததால் குளியலறையில் நீரில் மூழ்கி கிடந்ததை பார்த்து கத்தி கதறி அழுதுள்ளார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கே குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.