திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பகீர்.. கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த மனைவி.. கூலிப்படையை ஏவி கச்சிதமாக கணக்கை முடித்த கணவன்..!
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ராஜ்குமார் - பிரவீனா தம்பதியினர். இவர்களுக்கு சர்வேஸ்வரன், யோகித் இன்று இரு மகன்கள் உள்ளனர். ராஜ்குமார் தனியார் டயர் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவரது மனைவி பிரவீனா நர்சிங் காலேஜ் 2ம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜ்குமாருக்கு வேலை பார்க்கும் இடத்தில் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பிரவீனா மற்றும் குடும்பத்தினர் ராஜ்குமாரை கண்டித்து உள்ளனர். இதனால் கடும் கோபத்தில் இருந்த ராஜ்குமார் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் ராஜ்குமார் தனது மனைவி பிரவீனாவை இருசக்கர வாகனத்தில் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக இரவில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அவர்களை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் பிரவீனாவை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளது. இந்த சம்பவத்தில் பிரவீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ராஜ்குமார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜகுமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் ராஜ்குமார் முன்னுக்குப் பின் முரணான பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்ட நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது ராஜ்குமாரின் கள்ளக்காதலுக்கு அவருடைய மனைவி பிரவீனா இடையூறாக இருந்ததால் கூலிப்படைகளை ஏவி மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து ராஜ்குமாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.