மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
100 நாட்களாக சிறையில் வாடிவந்த ப.சிதம்பரத்திற்கு, இன்று கிடைத்த சந்தோசம்!
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிக்கி, கடந்த ஆகஸ்டு மாதம் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை என கூறி டெல்லி உயர்நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த வியாழக்கிழமை விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதனை விசாரித்து சிதம்பரத்துக்கு இன்று ஜாமீன் வழங்கியது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இரண்டின் வழக்கிலுமே அவருக்குப் பிணை இருப்பதால் 100 நாள்களைக் கடந்து சிறையில் இருக்கும் சிதம்பரம் தற்போது சிறையில் இருந்து வெளியே வருகிறார்.