திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஜாமீனில் வெளியே வந்து அடுத்தடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள தலைகுந்தா காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அஜித். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து அடிக்கடி பாலியல் வன்கொடுமைக்கு செய்துள்ளார்.
மேலும் இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வர, உடனடியாக ஊட்டி போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் அஜித்தை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேலும், சிறுமிக்கு அச்சுறுத்தல் இருக்கக்கூடும் என்பதால், அஜித்தை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்த அஜித் மீண்டும் அதே பகுதியில் உள்ள ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து மீண்டும் கைது செய்யப்பட்ட அஜித் தற்போது கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அஜித்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமியை கடத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறிதண்டனையும், கொலை செய்து விடுவேன் என மிரட்டியதற்காக 2 சிறை தண்டனை என மொத்தம் 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.