மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மின்னல் வேகத்தில் ரூ.1 லட்சத்தை பறித்த பலே திருடர்கள்: வங்கியின் வாசலில் துணிகரம்..!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் பொன்னம்பலம் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கலா ராணி (52). சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள ஒரு வங்கிக்கு வந்தனர். அங்கு, தங்களது தங்க நகையை அடகு வைத்து ரூ. 1 லட்சம் ரொக்கமாக பெற்றனர். பணத்தை ஸ்கூட்டரில் உள்ள இருக்கைக்கு கீழ் பகுதியில் உள்ள பெட்டியின் உள்ளே வைத்து பூட்டினர்.
இதன் பின்னர் சண்முகம் சிதம்பரம் மேல வீதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தார். கலாராணி மட்டும் ஸ்கூட்டர் அருகே நின்று கொண்டிருந்தார். அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கலாராணியிடம் உங்கள் பணம் ரூ. 60 கீழே விழுந்துள்ளது என்று கூறினர். உடனே கீழே குனிந்து அந்த பணத்தை அவர் எடுத்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அந்த நபர்கள், ஸ்கூட்டர் சீட் பூட்டை உடைத்து, அதில் வைத்திருந்த ரூ. 1 லட்சத்தை எடுத்ததனர்.
இதனை கண்ட கலா ராணி திருடன் திருடன் என்று கத்தி கூச்சலிட்டார். அதற்கு முன்பாக அவர்கள் பணத்துடன் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கலாராணி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், வங்கியில் இருந்து சண்முகம் பணம் எடுத்து வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தான் பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்க முடியும் என்று கருதி, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர், 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.