பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்-க்கு தடை! அதிரடி உத்தரவு!



ban for friends of police

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் காவல்துறை விசாரணையில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய பல போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் காவல்நிலையத்தில் தந்தை - மகன் இருவரையும் தாக்கியதில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸிற்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சில பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களையும் கைது செய்து தீவிர விசாரணை செய்து தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்றும் இணையத்தில் குரல் கொடுத்து வருகின்றனர்.

friends of police

 ஆனால் இதற்கு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் சிக்கியதை அடுத்து திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு  தற்காலிக தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் காவல் நிலையத்திற்குள் பிரண்ட்ஸ் ஆப் போலீசை அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருச்சி சரக டிஐஜி தெரிவித்துள்ளார்.