மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலியின் அந்தரங்க போட்டோ இன்ஸ்டாவில் லீக் : நண்பர்களை வைத்து காதலனை கதறக்கதற தீர்த்துக்கட்டிய காதலி.!
தனது அந்தரங்க போட்டோவை இன்ஸ்டாகிராம் செயலியில் வெளியிட்ட காதலனை நண்பர்ளை வைத்து தானும் சேர்ந்து கொடூரமாக தாக்கி கொலை செய்த காதலி மற்றும் அவரின் நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் விகாஷ் (வயது 27). இவர் உக்ரைனில் மருத்துவம் பயின்றுவிட்டு, சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக உயர் படிப்புக்காக விகாஷ் பெங்களூர் சென்றிருந்த நிலையில், உயர்படிப்புக்கு பின்னர் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை வழங்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக பிரதீபா என்ற பெண்ணுடன் விகாஹுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த பிரதீபா, பெங்களூரில் உள்ள எச்.எஸ்.ஆர் லே அவுட்டில் கட்டிட கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவரிடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வரவே, இருவரின் காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
வரும் நவம்பர் மாதத்தில் இருவருக்கும் திருமணம் செய்யலாம் என்று முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையில், ப்ரதீபாவின் அந்தரங்க புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானது. அதில், ப்ரதீபாவின் தாயாரும் இருந்துள்ளார். விகாஷின் மடிக்கணினியை பிரதீபா பயன்படுத்திய சமயத்தில் அவருக்கு உண்மை அம்பலமாக, விகாஷ் தனது நண்பர்களுக்கு அந்தரங்க புகைப்படத்தை பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது.
காதலரிடம் இதுகுறித்து காதலி முறையிடுகையில், எனது நெருங்கிய நண்பர்களுக்கு அதனை பகிர்ந்தேன். போலியான கணக்கு தொடங்கி விளையாட்டுத்தனமாக பதிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரதீபா, காதலனின் நடவடிக்கை குறித்து நண்பர்களான சுஷீல், கெளதம், சூர்யா ஆகியோரிடம் தெரிவித்து இருக்கிறார். கடந்த 10-ம் தேதியின் போது விகாஷை அழைத்துக்கொண்டு மைக்கா லே அவுட் பகுதிக்கு சென்று மதுபானம் அருந்தியுள்ளனர். அங்கு நண்பர்கள் விகாஷிடம் ப்ரதீபாவின் அந்தரங்க புகைப்படம் வெளியானது குறித்து கேள்வி கேட்டுள்ளனர்.
அப்போது இவர்களுக்குள் வாக்குவாதம் எழவே, போதையில் நண்பர்கள் தரை துடைக்கும் மாப் கட்டை, தண்ணீர் பாட்டில் போன்றவற்றை அரைமணிநேரம் விகாஷின் முகத்தில் படுமாறு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த விகாஷ் மயங்கி விழவே, அவரை பிரதீபா மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார். மேலும், மர்ம நபர்கள் கணவரை தாக்கி சென்றதாக அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் ப்ரதீபாவின் மீது எவ்வித சந்தேகமும் எழவில்லை. கடந்த 14-ம் தேதி விகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவே, அவரின் சகோதரர் விஜய் அளித்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் உண்மை அம்பலமானது. இதனையடுத்து, பிரதீபா, சுஷில், கெளதம் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், தலைமறைவான சூர்யாவுக்கு வலைவீசியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.