மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாடிக்கையாளர்களிடம் இந்தியில் பேசிய வங்கி மேலாளர்... திருவாரூரில் பரபரப்பு!!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒன்றில் வாடிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவ்வங்கியில் பணியாற்றி வரும் வங்கி மேலாளர் இந்தியில் விளக்கம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் நன்னிலம் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒன்றில் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் தவித்துள்ளனர். இது குறித்து அவ்வங்கியின் மேலாளாரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அந்த மேலாளர் வடமாநிலத்தவர் என்பதால் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆனால் வாடிக்கையாளர்களுக்கு இந்தி தெரியாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எல்லாம் முக்கிய காரணம் வங்கியில் காசாளராக பணியாற்றும் நபர் இரண்டு நாட்களாக விடுப்பில் இருப்பதால் மாற்று பணியாளர் நியமிக்கப்பட்டதால் பணம் பெற முடியவில்லை என வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.