மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இனி இப்படி டிரஸ் போடக்கூடாது"வழக்கறிஞர்களுக்கு.. நீதிமன்றம் கெடுபிடி.!
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் சட்டப்படி பதிவிட்டுக்கொண்டு வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு வேலை செய்யும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வருகை தரும் போது முறையாக ஆடை அணிந்து வர வேண்டும் என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.
இருப்பினும் தற்போது வரை பல வழக்கறிஞர்களும் ஆடை விஷயத்தில் அதை சரியாக கடைபிடிப்பது இல்லை. இந்த நிலையில் பார் கவுன்சில் ஆடை கட்டுப்பாடு குறித்து புதிய உத்தரவு போட்டுள்ளது. அந்த உத்தரவின் படி நீதிமன்றங்களுக்கு வருகை தரும் வழக்கறிஞர்கள் முக்கால் பேண்ட், ஜீன்ஸ் மற்றும் லெக்கின்ஸ் போன்ற உடைகளை அணிந்து நீதிமன்றத்திற்கு வரக்கூடாது என்றும்,
அதுபோல நீதிமன்றத்தை தவிர மற்ற பொது இடங்களுக்கு வழக்கறிஞர்கள் செல்லும் போது கழுத்தில் பட்டையோ அல்லது வக்கீல் உடையோ அணிந்து கொண்டு செல்லக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த இந்த ஆடை கட்டுப்பாடு உத்தரவு இன்றிலிருந்து அமலுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.