திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தங்கையை காதலித்ததால்.. நண்பனை அடித்து கொன்று முட்புதரில் வீசிய அண்ணன்...!
திண்டுக்கல் மாவட்டம் சம்பட்டி அருகில் உள்ள சேடப்பட்டி தெற்கு தெருவில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வன் (50), இவரது மனைவி சின்ன பொண்ணு (48), இவர்களின் மகன் அஜித்குமார் (25). அஜித் குமார் பர்னிச்சர் செய்து வருகிறார். இவர்களது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த பழனிச்சாமி (65), பழனிச்சாமியின் மனைவி பாப்பா (48), இவர்களின் மகன் அழகு விஜய் (23). அழகு விஜய் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.
நண்பர்களான அழகு விஜயும் அஜித்குமாரும் ஊரில் ஒன்றாக சுற்றி வருவது வழக்கம். இந்நிலையில், அஜித்குமாரை பார்க்க அவர் வீட்டிற்கு, அழகு விஜய் அடிக்கடி வருவார். அப்படி வரும்பொழுது அஜித்குமாரின் தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இருவரும் காதலிப்பது அஜித் குமாருக்கு தெரிந்ததால், அவர் இருவரையும் கண்டித்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொள்வதை பார்த்து அஜித்குமார் இவர்களது காதலை கண்டுபிடித்து கண்டித்துள்ளார். இருந்தும் இவர்கள் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.
இதை தொடர்ந்து நேற்று இரவு அஜித்குமாரின் தாயார் ராமேஸ்வரம் சுற்றுலாவுக்கு சென்றுள்ளார். இதை தெரிந்து கொண்ட அழகு விஜய், இரவு 11 மணிக்கு அஜித்குமார் வீட்டிற்கு அவரின் தங்கையை பார்க்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அஜித்குமார் இதுவரையும் பார்த்துவிட்டு கண்டித்துள்ளார். மேலும் அஜித் குமாருக்கும், அழகு விஜய்க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அஜித்குமார் கட்டையால் அழகு விஜயை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அழகு விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை எதிர்பாராத அஜித்குமார், அழகு விஜையின் உடலை ஒரு சாக்கில் போட்டு கட்டி, இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று, ஆத்தூர் அருகே காமராஜர் அணை பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் அவரது உடலை வீசிவிட்டு, ஓடி வந்து விட்டார்.
முட்புதரில், சாக்கு முட்டையில் சடலம் கிடப்பதாக அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து முட்புதரில் சாக்கு மூட்டையில் கிடந்த அழகு விஜயின் உடலை கைப்பற்றி, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த படுகொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பரின் தங்கையான தன் காதலியை பார்க்கச் சென்ற இடத்தில், வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.