பத்து நாட்கள் பிச்சையெடுத்த பணத்தை, இந்த முதியவர் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! குவியும் வாழ்த்துக்கள்!



begger-donate-refund-money-for-corono

தூத்துக்குடி ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் அவர் மதுரையில் யாசகம் பெற்று நாடோடியாக நடைபாதையில் வாழ்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில் கொரோனோவால்  ஊரடங்கு அறிவிக்கபட்ட நிலையில்,  மாநகராட்சி தன்னார்வ அமைப்புகள் நடைபாதைகளில் வசிப்போரை மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர். இந்நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என எண்ணிய  பூல்பாண்டியன், மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட், பழ சந்தை பகுதிகளில் கடந்த 10 நாட்களாக யாசகம் செய்துள்ளார்.

begger
பின்னர் அதன் மூலம் கிடைத்த 10 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். மேலும் இதுபோல அவர் பல மாவட்டங்களுக்கு நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளார்.  

இதுகுறித்து பூல்பாண்டியன் கூறுகையில், நான் யாசகம் பெற்று கிடைக்கும் பணத்தில் இதுவரை 400 பள்ளிகளுக்கு நிதியுதவி செய்துள்ளேன்.  பள்ளிகளுக்கு நாற்காலிகள், மேசைகள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவை வாங்குவதற்கு நான் யாசகம் பெற்ற நிதியை வழங்கி இருக்கிறேன்.
சுமார் 2 மாதங்களுக்கு முன்னர்தான் மதுரைக்கு வந்தேன் எனக் கூறியுள்ளார். இந்த தகவல் வைரலான நிலையில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.