மது பாட்டில்கள் திரும்பப் பெரும் திட்டம்; தமிழக முழுவதும் செயல்படுத்துவதில் சிக்கல்.. டாஸ்மாக் நிர்வாகம் கோர்ட்டில் வாதம்..!



Big plan to take back wine bottles; Difficulty in implementation across Tamil Nadu.. Tasmac administration argues in court..

டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்ப பெற திட்டம் வகுக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதில் பல்வேறு சிக்கல் இருப்பதாக கோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்ப பெற திட்டம் வகுக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. சுற்றுச் சூழலை பாதுகாக்கும் கடமை தமிழக அரசிற்கு இருக்கிறது எனவும் குறிப்பிட்டிருந்தது.

இந்த திட்டத்தை நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தியதையும், 29 லட்சம் மதுபாட்டில்கள் விற்கப்பட்டு, அதில் 18 லட்சம் மதுபாட்டில்களை திரும்ப பெறப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி, திட்டத்தை வகுக்க கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மலைப்பகுதிகளில் 7 அல்லது 8 கடைகள் மட்டுமே இருக்கும். அதனால் அங்கு இந்த திட்டத்தை அமல்படுத்துவது எளிதானது. ஆனால் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல் படுத்துவது கடினம் என  சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயலபடுத்துவதில் இருக்கும் சிரமங்கள் குறித்த அரசின் அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க கோர்ட்டுக்கு உதவியாக நியமிக்கப்பட்டிருக்கும் வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.