மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாழ விடு.. உடல் எடை குறித்து ரசிகரின் கமெண்ட்.! செம டென்ஷனாகி நடிகை சமந்தா கொடுத்த பதிலடி!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா.மயோசிடிஸ் (Myositis) எனும் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதால் சில காலங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை சமந்தா 'சிட்டாடல்: ஹனி பனி' என்ற வெப் தொடரில் வருண் தவான் உடன் இணைந்து நடித்துள்ளார். இந்த வெப் தொடர் வரும் 7 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அண்மையில் அவர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அப்பொழுது ரசிகர் ஒருவர் அவரிடம், 'கொஞ்சம் உடல் எடையை அதிகரிங்கள்' என கூறியுள்ளார். அதற்கு சமந்தா, நான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவரின் அறிவுறுத்தல்களின்படியே எனது உணவை எடுத்துக்கொண்டு வருகிறேன். இந்த பிரச்சினையால் எனது உடல் எடையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறேன். தயவு செய்து மற்றவர்களின் குறைகளை கண்டுபிடிப்பதை நிறுத்துங்கள். நாம் 2024ல் இருக்கிறோம்', வாழு, வாழ விடு என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உண்மைதான்.. சில தவறுகளை செய்திருக்கேன்.! மனம்திறந்து ஃபீல் செய்த நடிகை சமந்தா!!
இதையும் படிங்க: சிம்பிளாக திருமணத்தை முடித்த பிக்பாஸ் விக்ரமன்.! மணப்பெண் யாரு தெரியுமா?? வைரலாகும் புகைப்படங்கள்!!