மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. 11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 84 வயது முதியவர்.! 12 ஆவது முயற்சியில் சிக்கிய பரிதாபம்.!
முதியவர் ஒருவர் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சம்பவம் சுகாதாரத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள மதிபுரா மாவட்டம், ஓரை கிராமத்தை சேர்ந்தவர் பிரமோதிய மண்டல் (வயது 84). இவர் அஞ்சலக துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை சுமார் 11 முறை கொரோனா தடுப்பூசிகளை இவர் செலுத்தியுள்ளார்.
பிப்ரவரி, மார்ச், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டெம்பர் என அடுத்தடுத்து தடுப்பூசியை செலுத்திய ப்ரமோதிய மண்டல், ஒவ்வொரு முறையும் தனது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என பல்வேறு ஆவணத்தையும் சமர்ப்பித்து இருக்கிறார். மேலும், தனது அலைபேசி எண், மனைவியின் அலைபேசி எண் என உறவினர்களின் எண்ணையும் கொடுத்து இருக்கிறார்.
கடந்த டிச. 30 ஆம் தேதி 11 ஆவது முறையாக கொரோனா தடுப்பூசியும் செலுத்திக்கொண்ட நிலையில், 12 ஆவது முறையாக தடுப்பூசி செலுத்த கிராமத்திற்கு அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று சென்று, ஆவணத்தை சமர்ப்பித்துள்ளார். அப்போது, அதிகாரிகள் அவர் ஏற்கனவே தடுப்பூசி செலுத்திஉள்ளதை உறுதி செய்துள்ளனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்கையில், தான் 11 முறை தடுப்பூசியை செலுத்திக்கொண்டேன் என்று கூறி அதிர வைத்துள்ளார். ஒவ்வொரு முறை தடுப்பூசி செலுத்திய பின்னரும் சிறப்பாக இருப்பதால் அதனை தொடர்ந்து செலுத்துகிறேன் என்றும் தெரிவித்து அதிகாரிகளை அதிர வைத்துள்ளார்.