மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தடுப்பூசி செலுத்தாம எங்க போற?.. வலுக்கட்டாயமாக ஊசி போடும் அதிகாரிகள்.!
இந்தியா முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒமிக்ரான் வகை கொரோனா பரவலும் தற்போது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தாதவர்களும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அரசு சார்பில் தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை மூலமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
शेखपुरा, बिहार के ग्रामीण इलाकों में वैक्सीन टीम ऐसे अपना काम कर रही है। #Bihar #Omicron pic.twitter.com/lYusnPNwRX
— Alok Kumar (@dmalok) December 14, 2021
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள ஷேக்புரா பகுதியில், விவசாய நிலத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொழிலாளி ஒருவருக்கு, சுகாதாரத்துறையினர் வலுக்கட்டாயமாக தடுப்பூசியை செலுத்தியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இந்த விடியோவுக்கு ஆதரவு, எதிர்ப்பு என கண்டன பதிவுகளும் வைரலாகியுள்ளன.