மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேலைக்கு வந்த வட மாநில இளைஞர் கஞ்சா விற்பனையில் களமிறங்கியதால் கைது.. கிலோ கணக்கில் பறிமுதல்.!
வடமாநில இளைஞர் தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த நிலையில், காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட், சிந்தலக்குப்பம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக kavla துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சிப்காட் காவல் துறையினர் அதிரடியாக சென்று ஆய்வு செய்கையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் ஒடிசாவை சேர்ந்த ரமேஷ் மாஜித் (வயது 42), சாய்ராம் லிங்கா (வயது 24) என்பது தெரியவந்தது.
இவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருவரையும் கைது செய்த அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இவர்கள் இருவரும் சொந்த ஊருக்கு சென்று திரும்பி வந்த போது, தங்களுடன் கஞ்சாவையும் எடுத்து வந்து விற்பனை செய்ததும் அம்பலமானது.