மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்.! துரிதமாக செயல்பட்ட கார் ஓட்டுநர்.! கரணத்தில் தப்பிய மரணம்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே சாலையில் வேகமாக எதிரெதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இருவரும் சாலையில் தடுமாறி விழுந்தனர்.
அப்போது அந்த விபத்து ஏற்பட்ட ஒரு இருசக்கர வாகனத்திற்கு பின் தொடர்ந்து வந்த கார் ஓட்டுநர், விபத்தை கவனித்ததும் துரிதமாக செயல்பட்டு சாதுரியமாக தனது காரை சாலையின் ஒருபுறம் திருப்பி நிறுத்தினார். இதனால் அந்த கார் இருசக்கர வாகன ஓட்டுநரின் மீது மோதாமல் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அங்கு நடந்த விபத்து சம்பவம் அங்குள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இப்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.