மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லாரி - இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து.. இளைஞர் துடிதுடிக்க பரிதாப மரணம்.!
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு வேலு என்ற ஒரு மகன் உள்ளார். அவர் வேலைக்காக வெளியே சென்ற நிலையில், வேலை முடிந்த பின் மன்னார்குடி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே வழியாக வந்த லாரி ஒன்று நிலைதடுமாறி, வேலுவின் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த வேலு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைக்கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வேலுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் வேலைக்கு சென்று வரும் வழியில் லாரி மோதி பரிதாபமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.