மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பைக் டாக்ஸியில் சென்ற இளம் பெண்ணிடம் அத்துமீறிய ஓட்டுநர்!
சென்னையில் பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணுக்கு ஓட்டுநர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த 27 வயதான இளம் பெண் ஒருவர் நேற்று முன்தினம், கிண்டியிலிருந்து ரேபிடோ என்ற பைக் டாக்ஸி மூலம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இருசக்கர வாகனத்தை நடன சபாபதி என்ற நபர் ஓட்டி சென்றுள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண் இறங்கும் இடத்தில், பைக் டாக்ஸியின் ஓட்டுனர் நடன சபாபதி, அந்த பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அந்தப் பெண் ஹெல்மெட் ஆல் அவரை தாக்கி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
அதன் பின்னர் நீலாங்கரை காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடன சபாபதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.