#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
50 பைசாவிற்கு பிரியாணியா?.. வாயை பிளந்த பிரியாணி பிரியர்கள்; படையெடுத்ததால் பரபரப்பு..!
கரூர் அருகில் உள்ள ஒரு உணவகம் தொடங்கப்பட்டு ஒரு வருடம் முழுமை அடைந்ததை கொண்டாட அந்த உணவகத்தில், 50 பைசாவிற்கு பிரியாணி என அறிவித்ததால் பரபரப்பு.
கரூர் காந்திகிராமம் பகுதியில் இருக்கும் ஒரு அசைவ உணவகம் தொடங்கப்பட்டு ஒரு வருடம் முழுமையடைந்ததை கொண்டாட, அந்த உணவகம் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு, கடைக்கு வந்து பிரியாணி சாப்பிடும் நூறு பேருக்கு 50 பைசாவிற்கு சிக்கன் பிரியாணி அளிக்கப்படும் என அறிவித்திருந்தனர். இதனால் நேற்று அந்த கடை முன்பு ஏராளமான பிரியாணி பிரியர்கள், 50 பைசா நாணயத்துடன் அந்த கடையின் முன்பு குவிந்தனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, போக்குவரத்தை சரிசெய்தனர். பின்னர் இதுபோன்ற அறிவிப்புகள் ஏதாவது அறிவித்தால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உணவக உரிமையாளருக்கு அறிவுரை வழங்கினர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.