திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒரே மாதத்தில் கசந்த காதல் திருமணம்... நடுரோட்டில் வைத்து கணவரின் வெறிச் செயல்...!
மதுரை தெற்கு வாசல் சவானி கோவில் தெருவில் வசிப்பவர் மீனாட்சி சுந்தரம். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் இரண்டாவது மகள் வர்ஷா (19), 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு டைப்ரைட்டிங் பயிற்சிக்கு சென்று வருகிறார்.
அப்போது கீரை துறையை சேர்ந்த எம்பிஏ படிக்கும் பழனி என்பவரை காதலித்து வந்தார். இதை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு சில நாட்களிலே கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வர்ஷா பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். சில நாட்களுக்கு பிறகு வர்ஷாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்த பழனி அவருடன் வருமாறு வர்ஷாவை அழைத்துள்ளார்.
ஆனால் வர்ஷா பழனியுடன் செல்ல மறுத்ததால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இது பற்றி வர்ஷாவின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் இருவரும் கோர்ட் மூலம் விவாகரத்து வாங்கி பிரிந்து விடுவதாக எழுதிக் கொடுத்துவிட்டு சென்றனர்.
இந்நிலையில் வர்ஷா கடைக்கு சென்று திரும்பி வரும் வழியில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த பழனி வர்ஷ்ஷாவிடம் பேச முயற்சித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பழனி கையில் வைத்திருந்த கத்தியால் வர்ஷாவை சராசரியாக குத்தியுள்ளார். வர்ஷா அலறல் சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் பழனி தப்பித்து ஓடிவிட்டார். அங்கிருந்தவர்கள் வர்ஷாவை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் வர்ஷா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த, சிசிடிவி காட்சிகளை வைத்து பழனி தான் குற்றவாளி என்று முடிவு செய்தனர். நேற்று இரவு பழனி கீரை துறை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.