ஊழல் அரசு இனியாவது உண்மை பேசுமா?. அமைச்சர் கே.என் நேருவின் மாறுபட்ட பதில்கள்: கேள்வி எழுப்பும் அண்ணாமலை.!



BJP Annamalai about KN Nehru Speech 

 

தமிழகத்தின் தலைநகராக இருக்கும் சென்னையில், மழைக்காலங்களில் வெள்ளம் என்பது கடந்த காலங்களை போல அல்லது தீராத தலைவலி பிரச்சனையாக ஏற்பட தொடங்கிவிட்டது. கடந்த 2015ம் ஆண்டில் தொடங்கி, தற்போது வரை மழைக்காலத்தில் சென்னையின் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன. 

தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, சென்னையை மாற்ற பல கோடிகள் செலவிடப்பட்டாலும் காட்சிகள் மாறவில்லை. இயற்கையும் ஆண்டுக்கு ஒருமுறை தனது கோரத்தாண்டவத்தை பல்வேறு விதங்களில் காண்பித்து வருகிறது. சென்னை நகரில் நீர் தேங்குவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. 

பழைய விவகாரங்களை ஒதுக்கிவிட்டு புதிய விஷயங்களுக்கு வருவோம் என்றாலும், ஆட்சி மாற்றத்தின்போது அதிகாரிகளும், அமைச்சர்களும் சென்னையில் எவ்வுளவு பெரிய மழை வந்தாலும் நீர் தேங்காது என கூறிவிட்டு, மழைக்கு பின் வேறொன்று பேசுவது தொடருகிறது. எதிர்பாராத இயற்கை சீற்றத்தை சமாளிக்க இயலாமல் அரசு இயந்திரமும் திணறுகிறது. 

கடந்த நவம்பர் 04ம் தேதி அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்தபோது, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 98% நிறைவேறிவிட்டது. மழை பெய்தாலும் எங்கும் தண்ணீர் நிற்காது. 20 செ.மீ மழை பெய்தாலும் ஒருமணிநேரத்தில் மழை நீரை அகற்ற அனைத்து பணியாளர்களும் தயாராக இருக்கிறார்கள்" என தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், சென்னையில் 48% வடிகால் வாரிய பணிகள் நிறைவுபெற்றுள்ளன. மழைநீர் வடிகாலுக்கு ரூ.5,186 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த தொகையில் ரூ.2,191 கோடி மதிப்பீட்டிலான பணிகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

மேலும், அந்த பதிவில், "கடந்த மாதம் தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு, புயல் நீர் வடிகால் தொடர்பான 98% பணிகள் முடிவடைந்து, ஒரு மணி நேரத்தில் 20 செ.மீ மழையை வெளியேற்றும் திறன் கொண்டதாக உள்ளது என்று தெரிவித்தார். ஆனால், 42% மழைநீர் வடிகால் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக கே.என்.நேரு உறுதிப்படுத்தியதாக இன்றைய செய்திகள் கூறுகின்றன. வெள்ளம் சென்னை மக்களுக்கு ஏற்படுத்திய பேரழிவிற்குப் பிறகு, ஊழல் திமுக அரசு இனியாவது உண்மையைப் பேசுமா?" என கூறியுள்ளார்.