மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிமுக கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறுகிறதா பாஜக?.. அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!
எதிர்காலத்தில் நாம் தனியாக இருக்க வேண்டும். கூட்டணி நிலைப்பாடு எடுத்தால் நான் தலைவராக இருக்கமாட்டேன் என அண்ணாமலை பேசியுள்ளார்.
சென்னையில் உள்ள அமைந்தகரையில் தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் & அணித்தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், "நாம் தமிழ்நாட்டில் தனியாக இருந்தால் மட்டும் கட்சியை வளர்க்கலாம்.
கூட்டணி என்ற நிலைப்பாட்டினை எடுக்கும் பட்ச்சத்தில், நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தொண்டராக பணியாற்றுவேன். பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். கர்நாடக மாநில பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், மே மாத 10 ம் தேதி வரை கட்சி பணிகளில் இருப்பேன்.
எதிர்வரும் இத்தேர்தலில் அதிமுக கூட்டணி என முடிவு எடுக்கப்படும் பட்சத்தில், எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து சாதாரண தொண்டரை போல உங்களுடன் பணியாற்றுவேன்" என பேசினார். அவரின் கருத்துக்கு எதிராக மாநில துணை தலைவர் நாராயண திருப்பதி பேசியதால், கூட்டத்தில் லேசான சலசலப்பு உண்டானது.