#Breaking: பாமகவின் வெற்றிக்காக பாஜக உழைக்கும் - அண்ணாமலை அறிவிப்பு.!



BJP annmalai Pressmeet at Chennai BJP office 

 

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, "திமுகவுக்கு கிடைத்த வெற்றி நிரந்தரமானது இல்லை. வரும் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதியிலும் பாஜக அமோக வெற்றி பெறும். 

பாமகவின் வெற்றிக்கு பாஜக உழைக்கும்:
இடைத்தேர்தலில் பணத்தை செலவு செய்யும் அமைச்சர்களை திமுக அரசு ஏவி பயன்படுத்தும். நங்கள் மக்கள் மீதுள்ள நம்பிக்கையில் பாமகவை அங்கு களத்தில் நிறுத்தி இருக்கிறோம். பாஜக கூட்டணியில் பாமக நின்றாலும், கூட்டணிக்கட்சியின் வெற்றிக்காக நாளை முதல் நாங்கள் கடுமையாக உழைப்போம். பாமக ஏற்கனவே அங்கு பலமுறை களம்கண்டுள்ளது. 

இதையும் படிங்க: எஸ்.பி வேலுமணி - எடப்பாடி பழனிச்சாமி இடையே உட்கட்சி பூசல்? - முக்கிய புள்ளியின் பரபரப்பு பேச்சு.!

கூட்டணியில் ஈகோ கிடையாது:
2026 வரை மேம்படுத்தவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருப்பதால், நாங்கள் கூட்டணியாக பேசி முடிவெடுத்து இருக்கிறோம். கூட்டணிக்குள் ஈகோ விஷயத்திற்கும் இடம் கிடையாது. விக்ரவாண்டியில் பாமக நின்றாலும், பாஜக கடும் களப்பிரச்சாரத்தில் ஈடுபடும். 

பிரதமர் பொறுப்புக்கு மரியாதை கொடுக்க வேண்டும்:
பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்புக்கு மமதா பானர்ஜி வரவில்லை. அவர் இருட்டில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால், அதே இடத்திற்கு முரண்பாடுகள் கொண்ட மாலத்தீவு அதிபர் வந்தார், கொள்கை ரீதியாக கருத்து வேறுபாடு கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே வந்தார். இதனை நீங்கள் கவனிக்க வேண்டும். பிரதமர் பொறுப்புக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்" என கூறினார்.

இதையும் படிங்க: கோவை தொகுதியின் வெற்றிமுகம் அண்ணாமலையா? ராமச்சந்திரனா? ராஜ்குமாரா?.. கருத்துக்கணிப்பு நிலவரம் என்ன?.!