திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதல் விவகாரம்... கொடூரமாக கொலை செய்யப்பட்ட பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர்... காவல்துறை குற்றவாளிக்கு வலைவீச்சு.!
சேலம் மாவட்டத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில் முடி திருத்தும் தொழிலாளி தனது சகோதரனின் மனைவியை கழுத்தறுத்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தலைமறைவாக உள்ள கொலையாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானம் பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவர் அஸ்தம்பட்டி என்ற இடத்தில் முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சாந்தி பாஜக கட்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்தார்.
கண்ணனின் சகோதரர் கருணாநிதி. இவர் தனது அண்ணன் கடையில் வேலை செய்து வந்தார். கருணாநிதிக்கு ராஜேஸ்வரி என்ற மகள் இருக்கிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மோகன்லால் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அவர்களது எதிர்ப்பையும் மீறி மோகன்லால் திருமணம் செய்து கொண்டார் ராஜேஸ்வரி.
இது தொடர்பாக காவல்துறை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போது மோகன்லாலுடன் செல்ல விருப்பம் ராஜேஸ்வரி விருப்பம் தெரிவித்ததால் அவரை காதல் கணவருடனே காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கண்ணனின் வீட்டிற்கு ராஜேஸ்வரி மற்றும் மோகன்லால் வந்துள்ளனர். இதனை அறிந்த கருணாநிதி கடும் கோபம் கொண்டார். மேலும் தனது மகள் மோகன்லால் திருமணம் செய்ததற்கு சாந்தி தான் உதவி செய்தார் என நினைத்து தனது சகோதரரின் மனைவியை ஆத்திரத்தில் கழுத்தறுத்து கொடூரமாக படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கருணாநிதியை காவல்துறை தேடி வருகிறது.