திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிமுக - பாஜக பிளவு யாருக்கு நல்லது?: "நன்றி மறந்தார் எடப்பாடி" - எச்.ராஜா பரபரப்பு பேச்சு..!
இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் முடிவில், அக்கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி முறிவு விவகாரத்தில் பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ள தயார். தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப கட்சி கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறது. எதிர்வரும் தேர்தலுக்கு நமது தலைமையில் மட்டுமே கூட்டணி. அதில் பாஜக இருக்காது என அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி விலகல் குறித்து யாரும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம், பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என பாஜக நிர்வாகிகளுக்கு மாநில தலைமை அறிவுறுத்தி இருக்கிறது.
இந்நிலையில், அதிமுக - பாஜக பிளவு தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, "தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாஜக விலகியதில் எவ்வித நஷ்டமும் எங்களுக்கு இல்லை.
அதிமுக ஆட்சியை தக்கவைத்து, அவர்களின் கட்சியை ஒருங்கிணைத்ததே பாஜக தான். எடப்பாடி பழனிசாமி நன்றியை மறந்துவிட்டார். ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி இடையே சண்டை வராமல் நாங்கள் பார்த்துக்கொண்டோம்.
கிட்டத்தட்ட இவர்களுக்குள் சண்டை வராமல் பார்த்துக்கொள்வதே எங்களின் வேலையாகவும் இருந்தது. இனி அக்கவலை எங்களுக்கு இல்லை" என கிண்டலடிக்கும் வகையில் பேசினார்.