மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிமுகவில் இருந்து விலகியதற்கான மர்மம் உடைத்த நயினார் நாகேந்திரன்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!
பதவிக்காக அதிமுகவில் சண்டை நடைபெறுகிறது. அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதுவே அவர்களின் கட்சி வலுவுக்கு வழிவகை செய்யும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழக பாஜக சட்டப்பேரவை குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறேன்.
பாளையங்கோட்டை பகுதியில் பல்நோக்கு மருத்துவமனை, கால்நடை கல்லூரி போன்றவை கொண்டு வரப்பட்டுள்ளன. மானூர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பதவிக்காக அதிமுகவில் சண்டை நடந்து வருகிறது. அதனால் தான் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தேன். அதிமுகவினர் அக்கட்சியின் வளர்ச்சிக்கு ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.