திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கிறிஸ்துவ போதகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர்!
சென்னையில் கிறிஸ்துவ மத போதகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நெற்குன்றம் பகுதியில் கடந்த மார்ச் 28ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு, அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ போதகர்கள், பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி உள்ளனர். அப்போது அங்கிருந்த பாஜகவை சேர்ந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆபாசமாக திட்டியுள்ளனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. இந்த நிலையில் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த யோவான் என்பவர் கோயம்பேடு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு கடந்த மார்ச் 28ஆம் தேதி நெற்குன்றம் பகுதியில் ஊழியம் செய்வதற்கு சென்றிருந்தோம்.
அப்போது எங்களது வாகனத்தை வழிமறித்த பாஜக பிரமுகர் பிச்சாண்டி மற்றும் சிலர் எங்களை ஆபாச வார்த்தைகளால் திட்டினார். மேலும், மத கலவரத் தூண்டும் வகையில் எங்களை மிரட்டினர். எனவே கிறிஸ்துவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாஜக பிரமுகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.