திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்க காரணம் என்ன?.. புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை., பரபரப்பு பேட்டி.!
காவல்துறை அதிகாரிகள் தங்களின் அதிகாரத்தை சமூக விரோத செயலில் ஈடுபடுவோரிடையே காண்பிக்கவில்லை என்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என அண்ணாமலை எச்சரித்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "தமிழ்நாடு அரசு காவல்துறையினரின் செயல்பாடுகளை தடுக்க கூடாது. தூத்துக்குடி சாத்தான்குளம் போல சில இடங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் கண்டிக்கத்தக்கது. ஆனால், காவல்துறையினர் தங்களின் அதிகாரத்தை உபயோகம் செய்ய வேண்டிய இடங்களில் அதனை உபயோகம் செய்ய வேண்டும்.
அந்த விஷயத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் அல்லது மாநில அரசு தலையிட கூடாது. அவ்வாறு காவல் துறையினரின் பணியில் தலையிடுவதால் பல விருப்பதாகத நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடக்கிறது. கஞ்சா-மது போதையில் இளைஞர்கள் பல அட்டகாசம் செய்கிறார்கள். அவர்களை ஒடுக்க காவல்துறை லத்தியை கட்டாயம் உபயோகம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
காவல் துறையினர் கைகள் கட்டப்பட்டதால் பல விபரீதங்கள் நடக்கிறது. பெண்களுக்கு எதிரான பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறது. பட்டப்பகலில் பெண்களை கொலை செய்யும் துணிகரம் எங்கிருந்து வந்தது?. எல்லாம் கஞ்சா போதையில் அடிமையாகி இருக்கிறார்கள். அவர்களை திருத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. காவல் துறையினர் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தவேண்டிய இடங்களில் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்" என்று பேசினார்.