ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு: சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸில் தொடங்கியது இறுதி பயணம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், கடந்த கடந்த 17 ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் பள்ளி சூறையாடப்பட்டது. அங்கிருந்த பள்ளிவின் பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
மாணவி ஸ்ரீமதியின் இறப்பில் மர்மம் இருப்பதாக மாணவியின் தந்தை மனுதாக்கல் செய்திருந்த நிலையில் மாணவியின் உடலை 3 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் தடவியல் நிபுணர்கள் முன்னிலையில் மீண்டும் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என மாணவியின் தந்தை முறையிட்டார்.
ஆனால் அதற்கு நீதிமன்றம் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் மறுபிரேத பரிசோதனைக்கும் வரவில்லை உடலையும் பெற்று கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முறையீடு செய்தார் . அப்போது மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மாணவியின் உடல் பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கைகள், மற்றும் பிரேத பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஆகியவற்றை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்படைக்க வேண்டும் என்றும், 3 பேர் கொண்ட ஜிப்மர் மருத்துவக் குழு, இந்த அறிக்கைகளை ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும என்றும் உத்தரவிட்டார்.
மேலும், மாணவியின் உடலை நாளை (இன்று) காலை 11 மணிக்குள் பெற்றுக்கொண்டு கண்ணியமாக உடலை அடக்கம் செய்யும்படி பெற்றோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். உடலை பெற்றுக்கொள்வது தொடர்பாக இன்று (நேற்று) மதியம் 12 மணிக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும் பெற்றோர் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். நாளை (இன்று) 11 மணிக்குள் உடலை பெற்றுக்கொள்ளாவிட்டால் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து, உடலை பெற்றுக் கொள்ள மாணவியின் பெற்றோர் ஒப்புக் கொண்டனர். அதன் படி இன்று காலை 6.30 மணியளவில் மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட்து. இதனை தொடர்ந்து அவரது உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.